Posts

  கணினியின் பயன் கணினியின் பயன்         இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் என்னவெனில் கணினி எனலாம். மனித வாழ்க்கையில் கணினி பரவாத இடம் ஏதுமில்லை. கணினி மனிதனுக்குப் பல வகைகளில் பயனான ஒன்றாக விளங்குகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அன்றாட அலுவலகப்பணிகள் மற்றும் ஏனையத் துறைகளிலும் கணினியின் கையே மேலோங்கி நிற்கிறது.        கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. தற்போது எல்லா பள்ளிகளிலும் கணினி வழிக்கல்வி பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, அறிவியல் கணிதப் பாடங்களுக்காக பள்ளிகளில் மடிக்ககணினிகள்,ஒளியிழை வட்டுகள், பாட செறிவட்டுகள், போன்றவை கல்வி அமைச்சால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களும் அறிவியல், கணிதப் பாடங்களை இவற்றின் மூலம் மாணவர்களுக்குப் போதிக்கின்றனர்.  மேலும், கணினியின் அவசியத்தையும் தகவல் தொழில் நுட்பத்தையும் நன்கு அறிந்துள்ள அரசாங்கம், பள்ளிகளில் கணினி மையங்களையும் அமைத்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், பல கோடி வெள்ளியை அரசாங்கம் செலவு செய்வது கணினியின் அவசியத்தை...

கணினி என்றால் என்ன

Image
கணினியின் வரலாறு கணினியின் வரலாறு இன்றைய மனித வாழ்வின் அனைத்து நடைமுறைகளிலும் கணினியின் ஆதிக்கத்தைக் காண முடிகிறது. கணினியைப் புறக்கணித்துவிட்டு மனித வாழ்க்கையை மேம்படுத்த முடியாது. கணினி கணிக்கும் பணியைச் செய்யும் சாதனம் கணினி. பயனரிடமிருந்து உள்ளீடுகளைப் பெற்று, அவற்றைச் செயல்முறைப்படுத்தி, பயனுள்ள தகவலாய் மாற்றி, புரியும் வடிவில் வெளியிடும் ஒரு மின்னணு சாதனம் கணினி. கணினி பிறந்த கதை மரத்திலிருந்து ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. அதைப் பார்த்ததும் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். அதைப்போல, ஒரு திடீர் நிகழ்வின் போது மனிதன் கணினியைக் கண்டுபிடித்து விடவில்லை. பலநூறு ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் உருவானதே கணினி. கணிக்கும் பணி கணிக்கும் பணிக்காக உருவாக்கப்பட்டதே கணினி. கணிக்கின்ற பணி மனித குலத்துக்குப் புதியது அன்று. எண்ணுவதும் கணக்கிடுவதும் நீண்ட காலமாக நடைபெற்று வருவதே. ஆதிகாலத்தில் மனிதன் பண்டமாற்று முறையில் தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்று வந்தான். மனிதனின் தேவை பெருகப் பெருகப் பண்டமாற்று வணிகம் எளிதாக இருக்கவில்லை. எனவே பண்டத்தின் மதிப்பைப் பணமதிப்பாகக் கணக்கிடும் முறை ...